உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலின் அதி மனோகரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லாலின் அதி மனோகரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான தொடரும் திரைப்படம் 230 கோடி வசூலித்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து அதி மனோகரம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் தருண் மூர்த்தி. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், இவருக்கு ஜோடியாக அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

சபரிமலையில் காவல் பணியில் இருக்கும் டி.எஸ்.பி லவ் லாஜன் என்கிற கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !