உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், 73, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் விஜய் அஞ்சலி
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்த அவர், பாக்யராஜ் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.





திமுக., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதல்வரும், திமுக., தலைவருமான ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் கேஎன் நேரு, டிஆர் பாலு, ராசா உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தனியாக உதயநிதி, கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.





அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசக., தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சீமான, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, விகே சசிகலா, பிரேமலதா, ஜிகே வாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

ரஜினி அஞ்சலி
பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கமல் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தி பூர்ணிமா, சாந்தனு உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

திரையுலகினர் அஞ்சலி
பாக்யராஜ் உடலுக்கு ராதிகா, சரத்குமார், மணிரத்னம், பிரபு, விக்ரம் பிரபு, சமுத்திரகனி, ஏஎல் விஜய், ஹெச். வினோத், மன்சூர் அலிகான், பி வாசுஆர் சுந்தர்ராஜன், அர்ஜூன், பார்த்திபன், சுஹாசினி, இசையமைப்பாளர் தேவா, சந்தானபாரதி, சித்ரா லட்சுமணன், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், சார்லி, சின்னி ஜெயந்த், சினேகன், லோகேஷ் கனகராஜ், ஒய்ஜி மகேந்திரன், ஸ்ரீபிரியா, கவுண்டமணி, செந்தில், காஜா ஷெரீப், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்குமரன், இயக்குனர்கள் சங்கம் சார்பாக பேரரசு, சசி, ஏஆர் முருகதாஸ், பாண்டியராஜன், ஆர்கே சுரேஷ், ஜீவா, ராமராஜன், சுசீந்திரன், ஜெயராம், சிஆர் சரஸ்வதி, வையாபுரி, பரத், கலையரசன், நாசர், பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள், புகழ், சுகன்யா, சேரன், மலையாள நடிகர் திலீப், இயக்குனர் பாலா, யார் கண்ணன், ஷகிலா, எஸ்வி சேகர், ஸ்ரீகாந்த், ராதாரவி, விமல், தியாகராஜன், பிரசாந்த், சினேகா, பிரசன்னா, தனுஷ், நளினி, ஸ்ரீகாந்த் தேவா, சுப்பு பஞ்சு, ஆர்வி உதயகுமார், தம்பி ராமையா, கஸ்தூரி, விஜயகுமார், காளிதாஸ் ஜெயராம், கேஆர் விஜயா, வடிவுக்கரசி, கேஎஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


இளையராஜா இரங்கல்
பாக்யராஜ் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். நான் இப்போது வெளிநாட்டில் சுற்று பயணத்தில் இருப்பதால் உடனடியாக என்னால் வந்து பார்க்க முடியாத நிலையில் உள்ளேன். அவரை இழந்துவாடும் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

N.Palaniyappan, Karaikal
2026-06-27 15:33:01

ந. பழனியப்பன் காரைக்கால்தமிழ் திரை உலகம் மாபெரும் இயக்குனர். நடிகர், திரைக்கதை ஆசிரியர் இழந்து நிற்கிறது. குரு பாரதிராஜா சாரை இழந்த வடு மறைவதற்குள் இவரின் இழப்பு மிகுந்த வேதனயளிக்கின்றது. இருவரும் காலத்தால் அழியாத படம் எனும் காவியங்களை படைத்துள்ளனர். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.