உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மூக்குத்தி அம்மன் 2' அடுத்த வருடம் தான் திரைக்கு வருமா?

'மூக்குத்தி அம்மன் 2' அடுத்த வருடம் தான் திரைக்கு வருமா?


ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2ம்' பாகத்தில் நடிக்கின்றார். இந்த பாகத்தை ஆர். ஜே. பாலாஜிக்கு பதிலாக சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

ரூ. 100 கோடிக்கும் மேல் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் குறிப்பாக கிராபிக்ஸ் அதீத கவனத்துடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்கிறார்கள். இதற்கு காரணமாக கிராபிக்ஸ் பணிகள் செய்து தரும் நிறுவனத்திற்கு தயாரிப்பு தரப்பில் இன்னும் பேசிய தொகை தராததால் கிராபிக்ஸ் பணிகள் நிலுவையில் உள்ளது என்கிறார்கள்.

இதனால் மூக்குத்தி அம்மன் 2 கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெற்று இந்தாண்டு திரைக்கு வர வாய்பில்லை. அடுத்த ஆண்டு தான் திரைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் சுந்தர். சி தற்போது விஷாலை வைத்து இயக்கி வரும் 'புருஷன்' படத்தில் தான் கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !