டிசம்பரில் ரிலீஸிற்கு தயாராகும் பிரபாஸின் பவுசி
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் பவுசி. இதில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை இமான்வி நடிக்க, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, அனுபம் கெர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற டிசம்பர் மூன்றாம் தேதி பிரிமியர் காட்சிகள் திரையிடப்படுவதாக அறிவித்துள்ளார்கள். டிசம்பர் நான்காம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் படம் 2027லும், கல்கி- 2 படம் 2028 வெளியிட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பவுசி படத்தை 2026 டிசம்பரில் எப்படியும் வெளியிட வேண்டும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள நிலையில், சில மாதங்களிலேயே அதை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குனர் ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.