உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 47வது படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகிறது

சூர்யா 47வது படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகிறது

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு படம் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள சூர்யா, அதையடுத்து தற்போது ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடித்து வருகிறார்.

ஜீத்து மாதவன் கூறுகையில், சிங்கம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சூர்யாவுக்காக திரைக்கதையை மிக நேர்த்தியாக உருவாக்கி உள்ளேன். கண்டிப்பாக சூர்யாவுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று கூறி இருக்கும் அவர், இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் போஸ்டர் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூடிய சீக்கிரம் அது குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா 47 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க, நெஸ்லின் கபூர் கீ ரோலில் நடிக்கிறார். சூர்யா - ஜோதிகாவின் ழகரம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !