உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் படத்தை கண்டுக்கொள்ளவில்லை: 'திருக்குறள் 2' இயக்குனர் ஆதங்கம்

என் படத்தை கண்டுக்கொள்ளவில்லை: 'திருக்குறள் 2' இயக்குனர் ஆதங்கம்


ஏஜே பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கலைச்சோழன் தனலட்சுமி நடிக்கும் 'திருக்குறள் 2' படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் ஆதங்கத்துடன் பேசியதாவது: நான் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்தேன். அந்த படத்துக்கு 80 லட்சம் மேல் செலவானது. ஆனால் அதிக அளவில் உதவி கிடைக்கவில்லை. என் சொந்த நிலத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்து 'திருக்குறள்' படத்தை எடுத்தேன். அந்த படத்தால் மன நிறைவு கிடைத்தது, ஆனால் பெரிய லாபம் கிடைக்கவில்லை.

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்தவர் எத்தனையோ படங்களை பார்த்தார். ஆனால் திருக்குறள் மட்டும் படத்தை பார்க்கவில்லை. இப்பொழுது 'திருக்குறள் 2' படத்தை வேறு கோணத்தில் எடுக்கிறேன். திருவள்ளுவரின் அரசியல் மற்றும் அவருடைய வாழ்வை இந்த கதை விவரிக்கிறது. முந்தைய படத்தில் நடித்தவர்கள் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். ஆங்கிலத்திலும் இந்த படம் உருவாகிறது.

இந்த படம் குறித்து பேச, பட பூஜை அழைப்பிதழ் கொடுக்க இப்போதுள்ள முதல்வரை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரை எங்களால் பார்க்க கூட முடியவில்லை. திருவள்ளுவர் குறித்த இந்த படத்திற்கு துறை அமைச்சர் வந்திருந்தால் நன்றாக இருக்கும். ஏனோ அது நடக்கவில்லை. ஒரு சில நல்ல உள்ளங்கள் இந்த படம் உருவாக உதவுகிறார்கள், வாழ்த்துகிறார்கள், அது போதும். திருவள்ளுவருக்கு அரசியல் சாயம் பேசுவதை நான் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !