உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை இறுதியில் 'டிரைன்' ஓடுகிறது: விஜய் சேதுபதி படத்துக்கு விடுதலை

ஜூலை இறுதியில் 'டிரைன்' ஓடுகிறது: விஜய் சேதுபதி படத்துக்கு விடுதலை


எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித்த 'டிரைன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டாலும், சாடிலைட், டிஜிட்டல் விற்காத நிலையில், வேறு சில பிஸினஸ் காரணம் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் படத்தில் பல பிஸினஸ் விற்பனையான நிலையில், விரைவில் டீசர், டிரைலர், பாடல் வெளியீட்டுவிழா நடக்க உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக உதயநிதி நடித்த 'சைக்கோ' என்ற படம் வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக அவர் படங்கள் வரவில்லை. 'பிசாசு 2' படமும் பல்வேறு பிரச்னையில் தவித்து வருகிறது. படங்களில் நடிப்பது, மேடைகளில் பேசுவது, டிவி ஷோ, ஊர் சுற்றுவது என மிஷ்கின் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், டிரைன் பட அப்டேட் அவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜூலை இறுதிக்குள் டிரைன் ரிலீஸ் ஆகலாம் என தகவல். இந்த படத்தை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'ஸ்லம்டாக்' படம் அடுத்து வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !