வாசகர்கள் கருத்துகள் (1)
துல்கர் நடித்த லக்கீ பாஸ்கர் படத்தில் இதே போன்று luxury car கடத்தும் காட்சி உள்ளதே
பூட்டானில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, கடந்த வருடம் கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் 'ஆப்பரேஷன் நும்கோர்' என்கிற பெயரில் சோதனை நடத்தியதில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேசமயம், தான் சட்டபூர்வமான வழிகளிலேயே இந்த வாகனங்களை வாங்கியதாகவும், அவை பூட்டானிலிருந்து கடத்தப்பட்டவை என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் துல்கர் சல்மான் விளக்கமளித்தார். அது தொடர்பான ஆவணங்களையும் அவர் ஏற்கனவே சமர்ப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் துல்கர் சல்மானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் கார்களை வாங்கிய விதம், பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் சுங்கத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
துல்கர் நடித்த லக்கீ பாஸ்கர் படத்தில் இதே போன்று luxury car கடத்தும் காட்சி உள்ளதே