உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி : ஆகஸ்டில் ரிலீஸ் ஆகுமா மாத்ருபூமி ?

சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி : ஆகஸ்டில் ரிலீஸ் ஆகுமா மாத்ருபூமி ?

ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் அபூர்வ லகியா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'மாத்ருபூமி'. கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாவதால், முதலில் 'பேட்டில் ஆப் கல்வான்' என டைட்டில் வைக்கப்பட்டது. பின்னர் அதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 'மாத்ருபூமி' என டைட்டில் மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படத்தில் சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக சீனாவை நேரடியாக குறிப்பிடும் காட்சிகளை குறைப்பது, மீண்டும் சில காட்சிகளை படமாக்குவது போன்ற விஷயங்களை படக்குழுவினர் மேற்கொண்டனர்..

இந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சென்சார் போர்டு அனுமதி வழங்குவதில் சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்பதால் இந்த தாமதம் நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் விதமாக திட்டமிடப்பட்டிருந்த படம் குறித்தபடி வெளியாகுமா என்கிற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !