உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மகுடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

'மகுடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?


சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படமான 'மகுடம்' என்கிற படத்தை விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் மகுடம் படத்தில் இருந்து டீசர், பாடல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து மகுடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜூலை 16ம் தேதியன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !