மலையாள படத்தின் ரீமேக்கா? மறுத்த கீர்த்தி சுரேஷ்!
தெலுங்கில் 'F2, F3, பகவந்த் கேசரி, சங்கராந்திக்கி வஸ்துனா,மனா சங்கரா வர பிரசாத் காரு' உள்ளிட்ட கலகலப்பான கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கி பெயர்பெற்று முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனில் ரவிபுடி.
தற்போது அனில் ரவிபுடி, வெங்கடேஷ் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாகிறது. இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தில் வெங்கடேஷ் உடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் இளம் நாயகன் ஆன நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கின்றார்.
இந்த படத்தில் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராமிற்கு ஜோடியாக இளம் நாயகியான கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்படம் கடந்த 2024ம் ஆண்டில் மலையாளத்தில் பிரித்விராஜ், பசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்து வெளிவந்த ' குருவாயூர் அம்பலநடையில்' படத்தின் ரீமேக் என தகவல் பரவி வந்தது. இதற்கு கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது ரீமேக் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.