உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நம் நாட்டின் பெருமை, நம் விஞ்ஞானிகளின் சாதனை நமக்கே தெரிவதில்லை : மாதவன்

நம் நாட்டின் பெருமை, நம் விஞ்ஞானிகளின் சாதனை நமக்கே தெரிவதில்லை : மாதவன்

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட கோவையை சேர்ந்த விஞ்ஞான ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு 'ஜி.டி.என்' என்ற பெயரில் சினிமாவாகிறது. மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடிக்கிறார். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், ப்ரியாமணி உட்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

ஜி.டி.என் படத்தின் டிரைலர் கோவை கார் ரேஸ் மைதானத்தில் நடந்தது. முன்னதாக விழாவில் கார் ரேஸ் மற்றும் பழங்கால கார்களின் கண்காட்சி நடந்தது. நடிகர் மாதவன் 100 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டி அசத்தினார். அந்த வேகத்தில் கார் ஓட்டியபடியே பேட்டி கொடுத்தார். ஜி.டி.நாயுடுவின் முதல் பஸ்சில் அமர்ந்தபடியும் பேசினார்.

அவர் பேசுகையில் 'நம் நாட்டின் பெருமை, நம் விஞ்ஞானிகளின் சாதனை நமக்கே தெரிவதில்லை. அதனால், இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் இதுபோன்று ராக்கெட்டரி, துரந்தர் படங்களின் உண்மையாக இருந்த ஒருவராக நடித்துள்ளேன். இந்த படம் மிகவும் வித்தியாசமானது. கெட்அப் மாறுபட்டதாக இருக்கும். அவரின் சாதனைகளை மட்டுமல்ல, அவர் சந்தித்த போராட்டம், அவர் வெற்றி பெற்ற கதையையும் இதில் சொல்கிறோம். இந்த படம் வந்தபின் ஜி.டி.நாயுடு பற்றி உலகத்துக்கே தெரிய வரும். இப்போது டிரைலர் வெளியாகி உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். கோவையில் இந்த விழா நடப்பதும், ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்துகொண்டதும் சிறப்பு'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !