உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜுலை 10ல் 5 படங்கள் ரிலீஸ்

ஜுலை 10ல் 5 படங்கள் ரிலீஸ்


2026ம் ஆண்டின் அரையாண்டு காலம் முடிந்து அடுத்த அரையாண்டிற்கான இரண்டாவது வாரமும் வந்துவிட்டது. கடந்த அரையாண்டுகளில் தியேட்டர்கள், ஓடிடி தளங்களில் வெளியான படங்களையும் சேர்த்து மொத்தமாக 125க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த அரையாண்டின் ஆரம்பமான ஜுலை முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜுலை 3ம் தேதி நான்கு படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றில் 'கட்டா குஸ்தி 2' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து ஓடி வருகிறது.

இந்த வாரம் ஜுலை 10ம் தேதி, “அரூபி, இதயம் முரளி, லவ் ஓ லவ், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, முதற்கனல்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 17 அல்லது 23 ஆகிய தேதிகளில் விஜய் நடித்துள்ள கடைசி படமான 'ஜனநாயகன்' வரலாம் என சொல்லி வருகிறார்கள். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' படம் ஜுலை 31ம் தேதி வெளியாக உள்ளது.

'ஜனநாயகன்' வெளிவரும் தேதியைப் பொறுத்தே அடுத்த ஓரிரு வாரங்களுக்கான பட வெளியீடுகளில் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !