உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனைவியை ஏமாற்ற நினைத்ததில்லை : மாதவன்

மனைவியை ஏமாற்ற நினைத்ததில்லை : மாதவன்

நடிகர் மாதவன் திரையுலகில் நுழைவதற்கு முன்பே சரிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் தனது மனைவி குறித்துப் பேசிய கருத்துக்கள் வைரலாகின.

தனது மனைவி பற்றி அவர் கூறும்போது, நான் நடித்த படங்களில் பல அழகான நடிகைகளுடன் நடித்திருந்தாலும், ஒரு முறை கூட எனது மனைவியை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதாலும், மனைவியை ஏமாற்றிவிட்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இல்லை என்பதாலும் இப்போதும் உண்மையாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், கடவுள் எனக்கு ஒரு நல்ல மனைவியைக் கொடுத்திருக்கிறார், அதுவே எனக்குப் போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !