தென்கொரிய பெண்ணை மணக்கும் மகேஷ்பாபுவின் சகோதரி மகன்
ADDED : 1 days ago
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் சகோதரி பத்மாவதி. இவரது மகன் சித்தார்த் கல்லா. இவர் தனது நீண்ட கால தோழியான தென்கொரியாவைச் சேர்ந்த ஹைன் கிம்மைத் தற்போது திருமணம் செய்ய இருக்கிறார். விரைவில் இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற இருக்கிறது.
ஹைன் கிம் பயணங்களை அதிகம் விரும்புபவர் மற்றும் சேவைத்துறையில் பணியாற்றி வருபவர். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.