உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் நேரடியாக வெளியான அக்ஷரா ஹாசன் படம்

ஓடிடியில் நேரடியாக வெளியான அக்ஷரா ஹாசன் படம்

கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் 'ஷமிதாப்' ஹிந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு அவர் நடித்துள்ள ஹிந்திப் படம் 'சிமுலாக்ரா'. ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான அறிவியல் புனைவுக் கதை படமான இதில் சத்யஜித் துபே நாயகனாக நடித்துள்ளார். பங்கஜ் சாவந்த் இயக்கியுள்ளார். வேவ்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

படம் குறித்து அக் ஷரா ஹாசன் கூறும்போது, ''இதில் நிவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கேரக்ர். இந்த கதாபாத்திரத்துக்காக வேறுவிதமான முதிர்ச்சி தேவைப்பட்டது. கதையின் பல அடுக்குகள் காரணமாக, ஒரு நடிகையாக என்னுள் இருந்த புதிய பரிமாணத்தைக் கண்டறிய முடிந்தது. பலவிதமான உணர்வுகளின் மோதல்களை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தக் கதாபாத்திரம் ஒரு நடிகையாக எனக்கு பெரும் சவாலைக் கொடுத்தது. 'நிவி' யாக நடித்த அனுபவத்தை நான் உண்மையிலேயே ரசித்தேன்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !