உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் பௌசி படத்தால் பாலகிருஷ்ணா 111-வது பட வெளியீட்டில் மாற்றமா?

பிரபாஸின் பௌசி படத்தால் பாலகிருஷ்ணா 111-வது பட வெளியீட்டில் மாற்றமா?

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பீரியட் ஆக் ஷன் டிராமாவான பௌசி படம் வருகிற டிசம்பர் 3ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பிரபாஸின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், பாலகிருஷ்ணாவின்111-வது படத்தின் வெளியீட்டுத் திட்டங்களில் சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர்கள் தொடக்கத்தில் இப்படத்தை தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக டிசம்பரில் வெளியிட யோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது டோலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ள செய்திபடி, பாலகிருஷ்ணா 111- வது படத்தை டிசம்பர் 4 ஆம் தேதி அன்று வெளியிட பரிசீலித்து வந்தனர். ஆனால், தற்போது பிரபாஸின் பௌஜி டிசம்பர் 3ம் தேதியைக் கைப்பற்றியுள்ளதால், பாலகிருஷ்ணா தரப்பு தனது வெளியீட்டுத் தேதியை மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் இப்பட தயாரிப்பாளர்கள் டிசம்பர் மாதத்திலேயே வேறு ஒரு தேதியைத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது படத்தை 2027 சங்கராந்திப் பண்டிகைக்கு ஒத்தி வைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

வீர சிம்ஹா ரெட்டி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கோபிசந்த் மலினேனி - பாலகிருஷ்ணா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, தமன் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !