உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்': ரஜினி, கமல் பாராட்டுவார்களா?

'ஜனநாயகன்': ரஜினி, கமல் பாராட்டுவார்களா?


முன்னணி நடிகர்கள் படத்தை, நன்றாக ஓடும் அல்லது விமர்சன ரீதியாக பாராட்டப்படும் படத்தை, தனக்கு நெருக்கமானவர்கள் நடித்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு போனில் பாராட்டு தெரிவிப்பது ரஜினிகாந்த் பாலிசி. மிகவும் பிடித்து இருந்தால் அந்த படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுவார். அந்தவகையில் சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' படம் பார்த்துவிட்டு விஷ்ணு விஷாலை போனில் பாராட்டினார் ரஜினி.

'வித் லவ்' படக்குழுவை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' வெளியாகி விட்டது. அந்த படத்தை இன்னமும் ரஜினிகாந்த் பார்த்தது மாதிரி தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக பார்ப்பார். விஜய் நடித்த கடைசி படம், எச். வினோத் படம், பெண்கள் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துகள் படத்தில் கூறப்பட்டுள்ளதால் படக்குழுவை ரஜினி பாராட்டுவாரா? படம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவிப்பாரா? அல்லது ஏர்போட்டில் பேட்டி கொடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

சமீபகாலமாக விஜய்க்கும், அவருக்கும் உறவு சரியில்லை என கூறப்படும் நிலையில் இது நடக்குமா? என்றும் கேட்கப்படுகிறது. இதுவரை முதல்வரை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து கூறவில்லை. அதேசமயம் கமல்ஹாசன் வாழ்த்து கூறிவிட்டார். ஆனால், ஜனநாயகன் படத்தில் கமல்ஹாசனை, அவர் கட்சியை மோசமாக கிண்டல் செய்யும் ஒரு அரசியல் வசனம் இருக்கிறது. அது அவர்களை காயப்படுத்தி இருக்கிறது. அதனால், கமல்ஹாசன் ஜனநாயகன் குறித்து கருத்து தெரிவிப்பாரா? அந்த வசனத்துக்கு பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !