வெளியீட்டிற்கு தயாராகும் 'இடி முழக்கம்'
சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான 'இடம் பொருள் ஏவல்' என்ற படம் வெளிவராமல் இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் இயக்கிய 'இடி முழக்கம்' என்ற படம் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா, யோகிபாபு, பாபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தென் மாவட்டங்களை பின்னணியாக கொண்ட கிராமத்து ஆக்சன் படம்.
தற்போது இந்த படத்தை தூசி தட்டி எடுத்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக என்.ஆர். ரகுநந்தன் இசையில் உருவான இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்திருந்தனர். அதில் 'கானா விளக்கு மயிலே' என்ற நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன், 'அடி தேனி சந்தையில்...' பாடலை ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா பாடியுள்ளனர்.
இந்த பாடல்களை தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார் சீனு ராமசாமி. இதனால் இடிமுழக்கம் படத்தை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாக சொல்கின்றனர். சீக்கிரம் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளனர்.