உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் மணிசர்மா!

11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் மணிசர்மா!


தமிழில் 'பிரியமுடன், இரணியன், யூத், ஜித்தன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. அதன் பின்னர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான 'ஜித்தன் 2, தோட்டா, இங்கு என்ன சொல்லுது' உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வின்சென்ட் செல்வா இயக்குனராக 'சுப்ரமணி' என்கிற புதிய படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவரின் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ரிச்சர்ட் ரிஷி என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இந்த படம் குறித்து கிடைத்த கூடுதல் தகவலின் படி, 90ஸ் கிட்ஸின் மறக்க முடியாத இசையமைப்பாளர் மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக இணைந்துள்ளார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார் மணிசர்மா. தமிழில் 'படிக்காதவன், மாப்பிள்ளை, சுறா, போக்கிரி, திருப்பாச்சி, யூத், ஏழுமலை, ஷாஜகான்' உள்ளிட்ட படங்களில் மறக்க முடியாத பாடல்களை வழங்கியவர். குறிப்பாக ஏழுமலை படத்தில் அர்ஜுன் நடந்து வரும் காட்சியில் மாஸ் ஆக மணிசர்மா அமைத்த பின்னனி இசை இன்றும் ரசிகர்களால் ரசிக்கபடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !