கோவையில் ராம் சரணுக்கு ஆபரேஷன் நிறைவு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண். சமீபத்தில் இவரது நடிப்பில் ‛பெத்தி' படம் வெளியானது. பெரிய வெற்றியை பெறவில்லை. சிறிய அளவிலான நஷ்டத்தை சந்தித்தது. இந்த படத்தில் நடித்தபோது இவருக்கு வலது கை மணிக்கட்டில் அடிபட்டது. அந்த சமயம் சிறிய அளவில் சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து கொடுத்தார். இருப்பினும் இதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஆபரேஷனுக்காக ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு நேற்று வருகை தந்தார் ராம் சரண். அவருடன் தந்தை சிரஞ்சீவி, அம்மா சுரேகா, மனைவி உபாசனா உள்ளிட்டோரும் வந்தனர். இன்று(ஜூலை 28) கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளது. சில வாரங்கள் ஓய்வுக்கு பின் வழக்கம்போல் அவரது பணிகளை தொடரலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்பின் அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க போகிறார்.