குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை: குவியும் கண்டனங்கள்
ADDED : 5 hours ago
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர் பரினா ஆசாத். 'அழகு, பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் புகழ் பெற்றார். பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். இதுதவிர இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். தொடர்ந்து அதில் கவர்ச்சி படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் டவல் மட்டும் கட்டிக்கொண்டு, குளியல் அறையில் தான் குளிக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது ஒரு குளியல் ஷாம்பு விளம்பரத்திற்கான புரமோதான் என்றாலும், 'பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வீர்களா?' என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் இப்படி செய்யலாமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.