'பாட்வாரா 1947' டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அமீர்கான் பங்கேற்காதது ஏன்?
ஹிந்தியில் சன்னி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள 'பாட்வாரா 1947' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளரான அமீர் கான் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் அமீர்கான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்காத நிலையில், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்பான கேள்விகளைத் தவிர்க்கவே அமீர்கான் இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் அமீர்கான் வெளியிட்டபோது அறிக்கை விவாதங்களை ஏற்படுத்தியது. இது பணிச்சுமை காரணமா அல்லது அவரது தனிப்பட்ட முடிவா என்பது தெரியவில்லை. என்றாலும், தான் தயாரித்த படத்தின் டிரைலர் விழாவிலே அமீர்கான் கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.