உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நண்பர்கள் நால்வரை தயாரிப்பாளர்களாக மாற்றிய அல்லு அர்ஜூன்

நண்பர்கள் நால்வரை தயாரிப்பாளர்களாக மாற்றிய அல்லு அர்ஜூன்


தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது அட்லி இயக்கத்தில் 'ராக்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்தை தயாரிப்பாளர்கள் நவீன் ஏர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த நிலையில் தனது நண்பர்கள் நால்வரை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக மாற்றியுள்ள அல்லு அர்ஜூன், நட்பின் அடையாளமாக நேற்று அதற்கான அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

நால்வரில் பன்னி வாஸ் பல வருடமாக அல்லு அர்ஜூனின் வலது கரம் போன்று செயல்பட்டு அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருபவர். அதேபோல சந்தீப் ராமினேனி மற்றும் நட்ராஜ் ஆகியோர் அல்லு அர்ஜூனின் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள். ஸ்வாதி, அல்லு அர்ஜூனின் உறவினராக சிறுவயதில் இருந்தே நண்பராக இருப்பவர். இப்படி ஆரம்ப காலத்தில் இருந்து தனது வெற்றிக்காக உடனிருந்த நண்பர்கள் நால்வரை தயாரிப்பாளர்களாக மாற்றி தனது நட்பை பெருமைப்படுத்தியுள்ளார் அல்லு அர்ஜூன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !