உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 16 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பாரடைஸ்' டீசர்

16 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பாரடைஸ்' டீசர்


ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நானி, மோகன் பாபு, கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் 'தி பாரடைஸ்'. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது.

24 மணி நேரம் முடிவதற்குள்ளாக தெலுங்கில் 10 மில்லியன், ஹிந்தியில் 4 மில்லியன், தமிழில் ஒரு மில்லியன், கன்னடம், மலையாளம் இரண்டிலும் தனித் தனியே ஒரு மில்லியனை நோக்கி என மொத்தமாக 16 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.

கடந்த வருடம் வெளியான இப்படத்தின் தெலுங்கு க்ளிம்ப்ஸ் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர் 24ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !