தியேட்டரில் தோல்வி... ஓடிடி, டிஜிட்டல் தளத்தில் கொண்டாடப்பட்ட படங்கள்
தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒன்றரை மாதத்திற்கு பிறகு தான் ஓடிடி.,யில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதி சினிமா உலகில் பின்பற்றப்படுகிறது. ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பும் சரி, வந்த பிறகும் சரி பல படங்களை அந்த படம் ரிலீசான சமயத்தில் ரசிகர்கள் பார்க்காமல் அல்லது வரவேற்பை பெறாமல் அந்த படங்கள் தோல்வி படங்களாக கருதப்பட்டன. பிறகு அதே படத்தை ஓடிடி தளத்தில், ஏதாவது ஒரு நாளில் யதார்த்தமாக பார்த்து விட்டு, அதை பாராட்டு தள்ளி இருப்பார்கள். தியேட்டரில் தட்டித்தூக்க வேண்டிய 'மாஸ்டர் பீஸ்' படங்களை மிஸ் பண்ணிட்டு, அப்புறம் OTT-ல் பாத்துட்டு அடடே... இந்த படத்த தியேட்டரில் பாத்திருக்கலாமேடா! அப்படின்னு நம்மை வருத்தப்பட வைத்த OTT Cult Hits லிஸ்ட் இதோ!
1. அன்பே சிவம்
தியேட்டர் வைப்: என்னப்பா இது ரொம்ப தத்துவமாக இருக்கு...னு அன்றைக்கு படம் ரிலீசான சமயத்தில் தியேட்டரே காலி பண்ணிட்டாங்க.
OTT / Digital 'Comeback': இன்றைக்கு இருக்கும் நெட்டிசன்களுக்கு இது வெறும் படமில்லை, ஒரு 'Emotion'! கமல்ஹாசன் - மாதவனின் காம்பினேஷன், அன்பைப் பற்றிய ஆழமான கருத்துக்கள்னு YouTube & OTT-ல் இன்றைக்கும் மீம் டெம்ப்ளேட்டாகவும், லைஃப் லெசனாகவும் டிரெண்ட் ஆயிட்டு இருக்கு.
2. ஹே ராம்
தியேட்டர் வைப்: அப்போது இருந்த ஆடியன்ஸுக்கு இந்த படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும் புரியாமல் போனதால் 'ப்ளாப்' ஆக்கினாங்க. தெரிந்த வரலாற்று கதையையே எத்தனை முறை பார்ப்பது என ஒதுக்கினார்கள்.
OTT / Digital 'Comeback': ஆனால் இன்றைக்கு இருக்கும் Gen-Z சினிமா வெறியர்கள் இந்த படத்தின் கேமிரா வொர்க், டீடெய்லிங், இளையராஜாவின் பிஜிஎம்-ஐ பார்த்து மிரண்டு போறாங்க.
3. ஆரண்ய காண்டம்
தியேட்டர் வைப் : இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பாதி பேருக்கு தெரியாது.
OTT / Digital 'Comeback': தமிழ் சினிமாவின் முதல் புதிய இருண்ட குற்றப்படம். தியாகராஜன் குமாரராஜாவின் இந்த படைப்பு, OTT தளங்களில் வந்த பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்களால் 'கல்ட் கிளாசிக்' ஆகக் கொண்டாடப்பட்டது.
4. சில்லுக்கருப்பட்டி
தியேட்டர் வைப்: பெரிய ஸ்டார்ஸ் இல்லை என்ற காரணத்தால் தியேட்டரில் இந்த படம் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது.
OTT 'Comeback' (Netflix): ஓடிடியில ரிலீஸ் ஆன உடனே மன நிறைவு படம்னு Gen-Z கொண்டாடினார்கள். குறிப்பாக, வயதான பிறகும் வரும் அந்த காதலைக் காட்டும் எபிசோட்... நல்ல மேஜிக்.
5. ஆயிரத்தில் ஒருவன் (2010)
தியேட்டர் வைப் : அப்போது இருந்த மக்களுக்கு இந்த டார்க் பேண்டஸி (Dark Fantasy) கான்செப்ட் புரியவில்லை. என்னடா ரத்தமும் சதையுமாக இருக்கு என்று ப்ளாப் ஆக்கினார்கள்.
OTT / Digital Comeback: இன்றைக்கு இருக்கும் Gen-Z சினிமா விரும்பிகளுக்கு இது வெறும் படமில்லை. செல்வராகவனின் தலைசிறந்த படைப்பு, ஜீவி பிரகாஷின் பிஜிஎம், கார்த்தி - பார்த்திபன் கெமிஸ்ட்ரி, சோழர்களின் வரலாற்றுப் பின்னணி என்று இன்றைக்கும் வலைதளங்களில் இந்த படத்தை வைத்து பெரிய ஆராய்ச்சியே செய்து கொண்டு இருக்கிறார்கள். ரீ-ரிலீஸில் தியேட்டரில் ஹவுஸ்புல் ஆன படம். இந்த படத்தை பார்த்து விட்டு அடுத்த பாகம் எப்போது எடுப்பீர்கள் என செல்வராகவனை பலரும் கேட்க துவங்கி விட்டார்கள்.
6. மெஹந்தி சர்கஸ்
தியேட்டர் வைப்: எந்தவித பெரிய பப்ளிசிட்டியும் இல்லாமல் விமர்னம் மட்டும் நன்றாக வந்து தியேட்டரை விட்டு போனது.
OTT Comeback : ஷான் ரோல்டனின் (Sean Roldan) ஆன்மாவைத் தொடும் இசைக்காகவே இந்த படத்தை OTT-ல் Gen-Z தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒரு சர்க்கஸ் பெண்ணிற்கும் இசைக்கடைக்காரருக்கும் இடையிலான இந்த பீல்-குட் காதல் கதை, இன்ஸ்டா ரீல்ஸ்களில் இன்றைக்கும் டிரெண்டிங்!