உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் படத்தில் நயன்தாரா கமிட் ஆனது ஏன், விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்..?

டாக்சிக் படத்தில் நயன்தாரா கமிட் ஆனது ஏன், விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்..?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் டாக்சிக் படம் இந்த மாதம் 26ல் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் நடித்து இருந்தாலும், பெங்களூரில் நடந்த விழாவில் மற்ற ஹீரோயின்களை விட நயன்தாராவுக்குதான் மவுசு. அவர் பேச்சுக்குதான் வரவேற்பு.

பொதுவாக இப்படிப்பட்ட சினிமா விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நயன்தாரா, அதில் கலந்து கொண்டு நீண்ட நேரம் பேசினார். அவர் ஒரு ஹிந்தி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் பெங்களூர் நிகழ்ச்சிக்கு வந்து சென்றார். இத்தனைக்கும் அவர் படத்தில் ஹீரோயின் இல்லை. மற்ற ஹீரோயின்களை விட அவருக்கு சம்பளம் அதிகம் என்றும் கேள்வி. ஹீரோயின் ஆக நடிக்காத டாக்சிக் படத்துக்காக நயன்தாரா ஏன் இவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறார் என பலரும் கேட்கிறார்கள்.

அந்த படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் ஒரு பெண் இயக்குனர், மலையாளி, இரண்டுபேரும் மலையாளத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அவர் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதியிருக்கிறார். படத்தில் அவர் கேரக்டர் முக்கியமானது. அந்த பாசத்தில் டாக்சிக் படத்தில் கமிட் ஆனதாக தகவல். மேலும், யஷ் படம் என்பதால் சில ஆயிரம் கோடிக்கு வசூல் ஆகும். உலகளவில் பிரபலம் ஆகும். அதனால், அந்த படத்தில் கொள்கைகளை மறந்து ஓகே சொன்னார்.

பெங்களூரு நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மீடியா வந்திருந்தனர். தான் என்ன பேசினாலும் அது பெரியளவில் ரீச் ஆகும் என நம்பினார். அதனால் பக்காவாக ப்ளான் செய்து, அப்படி பேசினார். அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது. அதில் அவர் ஹீரோ யஷிற்கு சகோதரி வேடத்தில் வருகிறார். இதற்கு முன்பு அதர்வா அக்காவாக நடித்த இமைக்கா நொடிகள் வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்ட் காரணமாகவும் டாக்சிக் படத்தில் நடிக்க ஓகே சொன்னார். அது மட்டுமல்ல, மற்ற ஹீரோயின்களை விட நயன்தாராவுக்குதான் சம்பளமும் அதிகம். அதனால், அந்த படத்தில் கமிட்டானர். அந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !