இந்த முறையும் மிஸ் ஆகாது: சூர்யா பட தயாரிப்பாளரின் நம்பிக்கை
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ். அவர்கள் ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸ் என்ற மற்றுமொரு தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்கள்.
இந்த இரண்டு நிறுவனங்கள் தயாரித்த சில படங்கள் தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமான படங்கள். 2020ல் இந்நிறுவனம் இணைந்து தயாரித்து அல்லு அர்ஜூன் நடித்து வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்பட வெளியீட்டின் போது தயாரிப்பாளர் நாகவம்சி பதிவிட்டிருந்த ஒரு எக்ஸ் பதிவை மீண்டும் பதிவிட்டு, “எங்கள் தயாரிப்பில் வெளிவரும் ஒரு படத்தைப் பற்றி இவ்வளவு உறுதியான நம்பிக்கையுடன் நாங்கள் உணர்ந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கான காரணத்தை நாளை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள், எல்லா உணர்வுகளையும் அனுபவிப்பீர்கள். மேலும் திரையரங்கை விட்டு வெளியே வரும் போது 'விஸ்நாத் அண்ட் சன்ஸ்' உங்களுடனேயே பயணிக்கும்.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்த முறையும் இது மிஸ் ஆகாது” என்று பதிவிட்டுள்ளார்.
'அலா வைகுந்தபுரம்லோ' படம் வெளிவந்த போது “சங்கராந்திக்கு சந்திப்போம், கடந்த முறை போல் அல்லது, இம்முறை இது தவறவிடப்படாது,” என பதிவிட்டிருந்தார். அப்போது அந்தப் படத்திற்காக சொன்னதை மீண்டும் இப்போது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்காகவும் சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு அவருக்கு படத்தின் மீது நம்பிக்கை உள்ளது.