உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீசாகிறது 'இதயத்தை திருடாதே'

ரீ ரிலீசாகிறது 'இதயத்தை திருடாதே'

1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படம் 'கீதாஞ்சலி'. இந்த படம் தமிழில் 'இதயத்தை திருடாதே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்ற படம். நாகர்ஜுர்னா, கிரிஜா ஷெட்டர், விஜயகுமார், சவுகார் ஜானகி, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருது பெற்ற இந்தப் படம், ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குறுகிய காலமே உயிர்வாழப் போகும் ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் கதை. இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக, ஓ பிரியா பிரியா, ஓ பாப்பா லாலி பாடல்கள் இன்று வரை கேட்கப்படும் பாடல்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப மெருகேற்றம் செய்யப்பட்டு வருகிற 28ம் தேதி ரீ- ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்யலட்சுமி எண்டர்பிரைசஸ், ஸ்ரீபத்மினி சினிமா, டபிள்யூ.என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-08-14 14:19:22

நல்ல படம்.. அருமையான பாடல்கள்... இப்போ இருக்கிற கால கட்டத்தில் பொறுமை யா இந்த படம் யாரும் வருவார்களா சந்தேகம் தான். 1008 தடவை மேல் எல்லா டிவி சேனல் வந்து விட்டது.. அந்த காலத்தில் இந்த படத்தை பல முறை ரசித்த நானே இதை இப்போ நிச்சயம் தியேட்டர் ல போய் பார்க்க மாட்டேன்