12 ஆண்டுகளுக்கு முன்பே இதை நிவின்பாலி சொன்னார் : அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், காதல் என்ற பெயரில் இருந்த கட்டுப்பாடுகளைத் தகர்த்துவிட்டு தற்போது சுதந்திரமான பெண்ணாக வாழ்வதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் நிவின்பாலி சமீபத்தில் கேரள பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெண்கள் தங்களை அறியாமலேயே பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். துணிச்சலுடன் முன்னேறிச் செல்லுங்கள். யாரும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அறிவுரை வழங்கியிருந்தார்.
இதைக் குறிப்பிட்டுள்ள அனுபமா பரமேஸ்வரன், இந்த மனிதர் 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார் என்று இந்த பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேற்கோள் காட்டி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நிவின்பாலி நடித்த பிரேமம் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.