உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி' சம்பள பாக்கி வழக்கு : கோர்ட் போட்ட உத்தரவு

'பராசக்தி' சம்பள பாக்கி வழக்கு : கோர்ட் போட்ட உத்தரவு

சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா நடித்த 'பராசக்தி' படம் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. தமிழ் நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்து. இந்த படத்தை இயக்க சுதா கொங்கராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை பிப்ரவரி 8ம் தேதியிலிருந்து 8 சதவீத வட்டியுடன் செலுத்துமாறு கோரி சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டான் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் 8.39 கோடி ரூபாய் மதிப்புக்கு உத்தரவாதம் செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. அவ்வாறு செலுத்தத் தவறினால் அந்த நிறுவனத்தின் எதிர்கால படங்களின் வருவாயும் இணைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !