உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொழில்நுட்ப புரட்சியாளர் 'பிரசாத் லேப்' சிவராமன் காலமானார்: கமல் இரங்கல்

தொழில்நுட்ப புரட்சியாளர் 'பிரசாத் லேப்' சிவராமன் காலமானார்: கமல் இரங்கல்


தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று பிரசாத் லேப். பல திரைப்படங்களை தொழில்நுட்ப ரீதியாக படங்களை தயாரித்து கொடுத்த நிறுவனம். தொழில் புரட்சிகளையும் ஏற்படுத்திய நிறுவனம், இன்றைக்கும் சினிமா தொடர்பான பணிகளை மட்டுமே செய்து வரும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை தலைவராக பணியாற்றிய சிவராமன் நேற்று காலமானார்.

அவரது மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், ஏவிட், டிஜிட்டல் சினிமா என காலம்தோறும் பல்வேறு மாற்றங்களின் ஊடாக சினிமா வளர்ந்து வந்துள்ளது. இந்த மாற்றங்களில் எல்லாம் முக்கிய பங்கு வகித்த, பிரசாத் லேப்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் எஸ்.சிவராமன் காலமானார்.

ப்ராசஸிங், கலர் கரெக்ஷன் மற்றும் சவுண்ட் தொழில்நுட்பத்தில் அவர் முக்கியமான பங்காற்றியுள்ளார். இந்தியாவில் சினிமா தொடர்பான பல தொழில்நுட்பங்கள் நடைமுறையில் சாத்தியமானதுக்கு அவரே காரணம்.

பிலிம் ரீல்களில் இருந்து டிஜிட்டலுக்கு திரைப்படங்கள் மாறியபோது அதற்கு தேவையான பயிற்சிகளை சக கலைஞர்களுக்கு அவர் வழங்கினார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அவர் ஒரு தொழில்நுட்ப வழிகாட்டியாக விளங்கியுள்ளார்.

இந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் அவர் குறைந்தது 500 படங்களையாவது, ஒலி இல்லாமல் பார்த்திருக்க வேண்டும். இது சாதாரணமான விஷயம் இல்லை.

தென்னிந்திய திரையுலகம் அதன் தூண்களில் ஒன்றை இழந்து விட்டது. சாதாரண தூணை இல்லை. கற்பாறை போன்ற உறுதியான தூண் அது. மிகப் பெரிய இழப்பையும் அதனால் ஏற்படும் வெறுமையையும் நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !