உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூக்குத்தி அம்மன் 2வில் வில்லியாக ரெஜினா

மூக்குத்தி அம்மன் 2வில் வில்லியாக ரெஜினா

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இதில் ஊர்வசி, சினேகா, ரெஜினா, யோகிபாபு, துனியா விஜய், சிங்கம்புலி, அபிநயா , இனியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2020-ல் வெளியாகி வெற்றிபெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

சமீபத்திய தகவல்களின்படி, மூக்குத்தி அம்மன் 2 படத்தில் அஜித்தின் விடாமுயற்சியில் நெகட்டிவ் ரோலில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கண்டிராத ஒரு புதிய தோற்றத்தில், ரெஜினாவுக்காக ஒரு தனித்துவமான மற்றும் பவர்புல் கதாபாத்திரத்தை இயக்குநர் சுந்தர்.சி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 23 படத்தில் ஒரு முக்கியக் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரெஜினா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !