உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா

திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, 20 ஆண்டுகளை கடந்தும் நாயகியாக நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள ‛சதுரங்க வேட்டை 2, கர்ஜனை' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகாமல் பல ஆண்டுகளாக முடங்கி உள்ளன. தவிர தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஒரு படமும், மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் மெதுவாக நடக்கிறது. கருப்பு படத்திற்கு பின் த்ரிஷா கைவசம் வேறு படங்கள் இல்லை. கடந்த சில மாதங்களாக புதிய படங்களை தவிர்த்து வருகிறார். விரைவில் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியலில் இறங்கப் போவதாக கூட செய்தி வந்தது.

இந்நிலையில் புதிதாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க போகிறார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான மா இன்ட்டி பங்காரம் (தமிழில் எங்கள் தங்கம்) வெளியாகி வரவேற்பை பெற்றது. இதை நந்தினி ரெட்டி இயக்கினார். இவர் அடுத்து புதிதாக வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இதில் இவர் நடிக்கப் போகிறார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதையில் உருவாகும் இந்த தொடர் நாயகியை பிரதானப்படுத்தி எடுக்கப்பட உள்ளதால் இதில் நடிக்க சம்மதம் சொல்லி உள்ளார். நவம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !