உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜாவிற்கு ரூ.2.5 கோடியில் மணிமண்டம் : தமிழக அரசுக்கு திரையுலகினர் நன்றி

பாரதிராஜாவிற்கு ரூ.2.5 கோடியில் மணிமண்டம் : தமிழக அரசுக்கு திரையுலகினர் நன்றி

தமிழ் சினிமாவில் ‛இயக்குனர் இமயம்' என பெயர் எடுத்த பாரதிராஜா, கடந்த ஜூன் 10ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேனியில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சமீபத்தில் திரையுலகம் சார்பில் இவருக்கும், இவரது சிஷ்யரான மறைந்த கே பாக்யராஜிற்கும் நினைவஞ்சலி உடன் கூடிய புகழஞ்சலி கூட்டம் நடந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பாரதிராஜாவிற்கு ரூ.2.5 கோடி மதிப்பில் அவர் பிறந்த ஊரில் மணிமண்டம் கட்டப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்த் திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.

கமல்
நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜாவிற்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜா குடும்பத்தினர்

பாரதிராஜா மனைவி சந்திரலீலா மற்றும் அவரது குடும்பம் சார்பில் வெளியிட்ட அறிக்கை : ‛‛​மறைந்த எனது கணவர் பாரதிராஜா நினைவாக ​திரைத்துறையிலும் தனது வாழ்க்கையிலும் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், ரூ.2.5 கோடி செலவில் தேனியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வர் விஜயிக்கு எங்களது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர்கள் சங்கம்

தமிழ்த் திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசின் சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எங்களது கோரிக்கையை தங்களிடம் முன்வைத்திருந்தோம். தமிழ்த் திரைப்படக் கலைக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞரின் நினைவைப் போற்றும் இந்த அறிவிப்பு, அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், குறிப்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !