ரிலீசிற்கு முன்பே 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் என 'ஸ்பிரிட்' இயக்குனர் ஆரூடம்
ஹிந்தியில் வேணுகோபால் இயக்கத்தில் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'ரோமாஞ்சகம்' படத்தில் சுமந்த் பிரபாஸ், அனந்திகா சனில்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பான விழாவில் 'அனிமல்' இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா பங்கேற்றார். இதே பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படம் மார்ச் 5ல் ரிலீசாகிறது.
ரோமாஞ்சகம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் சந்தீப் ரெட்டி பேசுகையில், ''வாரணாசி படத்துக்கும் எங்களின் ஸ்பிரிட் படத்துக்கும் இடையேயான இடைவெளி 37 நாள்கள் இருக்கின்றன. அது போதுமானது தான். ஆனால் வாரணாசி எங்கள் படத்தைவிட பெரியது. நாம் என்னதான் முயற்சித்தாலும் ஸ்பிரிட் படத்துக்கும் சென்சார் போர்டு, ஸ்பிரிட் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்தான் தருவார்கள். அதனால்தான் சொல்கிறேன், எங்கள் தயாரிப்பில் வரும் முதல் 'யு/ஏ' படமான 'ரோமாஞ்சகம்' படத்துக்கு குடும்பத்துடன் வாருங்கள்'' என்றார்.