சினிமா தயாரிப்பாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் ஒத்திவைப்பு
சென்னை : செப்., 1 முதல் சினிமா தயாரிப்பாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம், தென் மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் இதனைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஆண்டுக்கு ரூ. 700 கோடிக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதை ஏற்க முடியாது என கூறி செப்.,1 முதல் படப்பிடிப்பு நிறுத்தப்படும், புதுபடங்கள் வெளியாகாது என அறிவித்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், ‛‛தமிழ் சினிமாவில் நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஆக., 26ல் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து பேசினோம். சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. தற்போது படங்கள் வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதை தொடருங்கள். கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வர் விஜயின் ஆலோசனைப்படி அரசு தலைமையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும். அதுவரை வேலை நிறுத்தம் வேண்டாம் என அறிவுறுத்தினார். இதை ஏற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1 முதல் அறிவித்த, புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்ஷன் ஆகிய வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது'' என்றார்.