டிசி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
ADDED : 16 hours ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் டிசி. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உலகளவில் வெளியானது. 25 கோடியில் தயாரான இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது.
சமீபத்திய தகவலின்படி, டிசி படம் வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல் டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் பிரைம் வீடியோவிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தேதியிலிருந்து டிசி படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தில் வாமிகா கபி கதாநாயகியாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்தார்.