உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா நடிகையான ரீல்ஸ் பிரபலம்

சினிமா நடிகையான ரீல்ஸ் பிரபலம்

சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவிற்கு வருகிறவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அமலா ஷாஜி. டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் 4.2 மில்லியன் பாலோயர்களைக் கொண்டிருக்கும் பிரபலமான இன்ப்ளூயன்சர் இவர்.

விக்ரம் பிரபு நடிக்கும் 'சிட்டி ஆப் கோல்ட்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார் அமலா ஷாஜி. ஷிவாத்மிகா ராஜசேகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சித்தார்த் படத்தை இயக்குகிறார்.

தங்க கடத்தல் மற்றும் கோவை நகரை மையமாகக் கொண்ட குற்றப் பின்னணி சார்ந்த கதையை பேசுகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்துக்கு கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அமலா ஷாஜி வெளியிட்டுள்ள பதிவில் ஒரு காலத்தில் நான் கற்பனை மட்டுமே செய்து பார்த்த ஒரு கனவு, இப்போது நிஜமாகிறது. எனது முதல் திரைப்படம். நான் என்றும் பொக்கிஷமாகக் கருதும் ஒரு தருணம். இந்த அழகான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியும், உற்சாகமும், மிகுந்த நன்றியுணர்வும் அடைகிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, இந்தத் தொடக்கத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய எங்களது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சிறிய தொடக்கம்தான், ஆனால் மிகவும் சிறந்ததாகக் கருதுகிறேன் என பதிவிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !