உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவிற்கு ஏமாற்றம் தந்த படங்கள்

நயன்தாராவிற்கு ஏமாற்றம் தந்த படங்கள்

கடந்த ஆகஸ்ட் 26ல் யஷ் நடிப்பில் திரைக்கு வந்த மெகா படம் டாக்சிக். இப்படத்தில் கதையின் முக்கியப் பகுதியாக இருக்கும் யஷின் சகோதரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 6 நாட்களில் உலக அளவில் 304 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதோடு நயன்தாராவின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பும் பாராட்டுகளை பெறவில்லை.

அதையடுத்து, கவினுக்கு ஜோடியாக நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஹாய் படம் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. காதலை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகியுள்ளது. ஆனால், இப்படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற தவறியதால், பாக்ஸ் ஆபீசில் 4 நாட்களில் 8 கோடி வசூலித்து பின்தங்கியுள்ளது. அந்த வகையில் நயன்தாரா எதிர்பார்த்த இந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன.

இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் சல்மான்கானுடன் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !