சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் நாகார்ஜுனா
நாகார்ஜுனா தற்போது தனது 100 வது படம் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளார். அவரது 100 வது படம் கிங் 100 என்ற பெயரில் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான இதன் முதல் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல், சிறப்பு மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் நாகார்ஜுனா ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினியின் கூலி படத்தில் வில்லனாகவும், தனுஷ் நடித்த குபேரா படத்தில் முன்னாள் சிபிஐ அதிகாரியாகவும் நடித்த அவர், ஹிந்தியில் பிரம்மாஸ்திரா என்ற படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இப்படி கதாநாயகனாக மட்டுமே நடிப்பதை விட, சுவாரஸ்யமான சிறப்பு கதாபாத்திரங்களையும், தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய தகவல்களின்படி, விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்கிய வினோத், அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நாகார்ஜுனாவை அணுகியுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நாகார்ஜுனா ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.