உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஐ ஆம் கேம்' படம் தமிழ் பட உணர்வை தரும்: துல்கர் சல்மான்

'ஐ ஆம் கேம்' படம் தமிழ் பட உணர்வை தரும்: துல்கர் சல்மான்


துல்கர் சல்மானின் “ஐ ஆம் கேம்” படம் செப்டம்பர் 3ம் தேதி ரிலீஸ். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படம் குறித்து துல்கர் சல்மான் பேசியதாவது: “நான் எந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வந்தாலும், நிறைய ஆதரவு, அன்பு கிடைக்கிறது. 'I Am Game' படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்டமான தயாரிப்பு இதுதான்.

இதில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும். அவர் எங்களுக்கு குரு.

சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

'ஐ ஆம் கேம்' முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், திரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனக்கு தமிழில் பல பாடல்கள் பிடிக்கும். நான் நடித்த 'ஓகே கண்மணி'யில் 'மெண்டல் மனதில்' பாடல் ரொம்ப பிடிக்கும்''. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !