உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / '6 ஆண்டுகளாக அலைந்தோம், ஹீரோவை மாற்றணும்னு சொன்னாங்க': 'மொத ராத்திரி' இயக்குனர் ராஜாகருப்பசாமி

'6 ஆண்டுகளாக அலைந்தோம், ஹீரோவை மாற்றணும்னு சொன்னாங்க': 'மொத ராத்திரி' இயக்குனர் ராஜாகருப்பசாமி


ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், பகவதிபெருமாள், அப்துல்லீ, சேத்தன் நடித்துள்ள மொதராத்திரி படம் வெற்றி பெற்றுள்ளது. 8 கோடி அளவுக்கு வசூலித்தததாக தகவல். இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் 'குட் பேட் அக்லி', 'டியூட்' 'இருமுடி கட்டு' படங்களை தயாரித்த மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ளது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நன்றி அறிவிப்பு விழாவில் இயக்குனர் ராஜா கருப்பசாமி பேசுகையில் '' ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ஹீரோ ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். சின்ன படங்களுக்கு இந்த படம் போல எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நிறைய திறமைசாலியான புதுமுகங்கள் சினிமாவுக்கு கொடுப்பார்கள். ஹீரோயின் அனிஷ்மா வேறு படப்பிடிப்பில் இருப்பதால் விழாவுக்கு வர முடியவில்லை. வீடியோ காலில் பேசுவார்'' என்றார். அனிஷ்மாவும் அதில் நன்றி சொன்னார். மாரி செல்வராஜ் இயக்கும் 'மாகாளி' படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.

ஹீரோ ரிஷிகாந்த் பேசுகையில், ''ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க எவ்வளவோ போராட்டங்களைச் சந்தித்தேன். சினிமாவில் எல்லா கதவுகளும் மூடப்பட்ட பிறகு, எனக்குக் கிடைத்த மிக முக்கியமான வெளிச்சம் இது'' என்றார். 'கூலி, ரசவாதி, இரும்புதிரை, ஹீரோ , ராக்கி, இந்தியன் 2' உட்பட பல படங்களில் நடித்தவர் ரிஷிகாந்த். இந்த படத்தின் மூலம் அவருக்கு ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இந்த மாதம் வர உள்ள 'டோரதி' படத்திலும் ரிஷிகாந்த் ஒரு ஹீரோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !