உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் படகு போட்டியை கண்டுகளித்த சரத்குமார் - ராதிகா

கேரளாவில் படகு போட்டியை கண்டுகளித்த சரத்குமார் - ராதிகா


சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வருடந்தோறும் பல இடங்களில் படகு போட்டிகள் நடப்பதுண்டு. அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆழப்புழாவில் நடைபெற்ற 72வது நேரு கோப்பை படகு போட்டியைப் பார்வையிட்டனர். 'அரோமா போட் கிளப்' நிறுவனம் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருக்கும் அழைப்பு விடுத்ததன் பேரில் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு போட்டியை ரசித்துள்ளனர்.

இந்த பாட் கிளப் சார்பாக கலந்துகொண்ட 104 துடுப்பு வீரர்கள் கடுமையான பயிற்சியின் மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட படகின் மூலம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றனர். இந்தப் படகு போட்டியைப் பார்க்கும்போது, சென்னை அடையாறு மெட்ராஸ் போட் கிளப்பில் தான் முன்பு போட்டிகளில் ஈடுபட்ட பழைய நினைவுகள் தனக்கு நினைவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார் சரத்குமார். இது போன்ற பிரமாண்ட படகு போட்டிகள் கேரளாவில் சுற்றுலாத்துறையை உலக அளவில் மேலும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !