என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கர் விருது தரலாம் : ரவி மோகனை சீண்டிய ஆர்த்தி
முன்னணி நடிகர் ரவி மோகனும், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தர்கள். தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டார்கள். இருவரும் மாறி மாறி கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்தது.
ரவிமோகன் தனது தோழி கெனிஷா உடன் தற்போது சுத்திரமாக வலம் வருகிறார். ரவி மோகன் இயக்கி வரும் 'ஆன் ஆர்டினரி மேன்' என்ற படத்திற்கு கெனிஷா இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் ஆர்த்தி அவரது சோஷியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு ரவியை சீண்டி உள்ளார்.
அவரது பதிவில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல், இவங்க எல்லாரையும் விட என் வாழ்க்கைல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. அதற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்த்தியின் இந்த பதிவு வைரலான நிலையில் அவர் குறிப்பிடுவது ரவி மோகனை தான் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆர்த்தி ரவி மோகன் பெயரை குறிப்பிடாததால் இது நீதிமன்ற உத்தரவு மீறல் பிரிவின் கீழ் வராது என்கிறார்கள்.