எம்.எஸ்.பாஸ்கர், அவர் மகன் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் ‛பீல் மை லவ்'
தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ஏ.என் பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் பீல் மை லவ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், அவர் மகன் ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் அய்யப்பா, மதுசூதனன் ராவ், நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‛ஹவுஸ் மேட்ஸ்' எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய ராஜ ரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். ஹரி பிரகாஷ் எம் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ஹாட் ஸ்பாட் 2 படத்தில் எம்.எஸ்.பாஸ்கரும், அவர் மகன் ஆதித்யா பாஸ்கரும் இணைந்து நடித்தனர். இப்போது மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.