/
தினம் தினம்
/
அக்கம் பக்கம்
/
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது!
/
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது!
PUBLISHED ON : ஜன 10, 2024 12:00 AM

'தொடர்ந்து எங்கள் தலைவருக்கே குறி வைக்கின்றனரே...' என காங்., முன்னாள் தலைவர் ராகுலின் அரசியல் எதிர்காலம் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், அவரது விசுவாசிகள்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி லோக்சபா தொகுதி, நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி. சஞ்சய், ராஜிவ், சோனியா ஆகியோர் அங்கு தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ராகுல், மூன்று முறை இந்த தொகுதியிலிருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த முறையும் நம்பிக்கையுடன் இங்கு களம் இறங்கினார். ஆனால், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, ராகுலை தோற்கடித்தார்.
'அமேதியில் இந்த முறை ராகுலை தோற்கடிப்போம்...' என சொல்லி அடித்து, சாதித்தனர், பா.ஜ., தலைவர்கள். அதே நேரம், கேரள மாநிலம், வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு வெற்றி பெற்று லோக்சபாவுக்குள் நுழைந்தார்.
இந்த முறை வயநாட்டிலும் ராகுலை தோற்கடிக்க வியூகம் வகுத்து வருகின்றனர், பா.ஜ., தலைவர்கள். இங்கு பா.ஜ.,வுக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், ஓட்டுகளை சிதறடித்து, ராகுலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, கேரளாவில் உள்ள பா.ஜ.,வினர் தீயாக வேலை செய்து வருகின்றனர்.
ராகுல் இனி, 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது...' என கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

