Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ வனவாசம்!

 வனவாசம்!

 வனவாசம்!


PUBLISHED ON : மே 02, 2026 02:01 AM

Follow on Google

PUBLISHED ON : மே 02, 2026 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள், யார் யாருக்கு என்ன நடக்கும் என தெரியவில்லையே...' என, ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் உள்ளனர், கேரள மக்கள்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடிக்குமா என, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரான, காங்கிரசின் வி.டி.சதீஷன், பிரசாரத்தின் போது, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு சவால் விடுத்திருந்தார்.

அப்போது அவர், 'இந்த முறை காங்கிரஸ் கூட்டணி, கேரளாவில் ஆட்சியை பிடிப்பது உறுதி. இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால், அரசியலுக்கு முழுக்கு போட்டு, வனவாசம் போய் விடுகிறேன்...' என்றார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்ததும், ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார், சதீஷன்.

இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதும், 'தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, சதீஷன் வனவாசம் சென்று விட்டாரே...' என, கம்யூனிஸ்ட் கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

தமிழக மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, மின்மாற்றிகள் எனும், 'டிரான்ஸ்பார்மர்'கள் கொள்முதலில், அரசுக்கு 375 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இம் மாபெரும் ஊழலில் தொடர்புடைய அனைவரும் விரைவில் தண்டிக்கப்பட்டு, சிறை செல்வது உறுதி.

'சி.பி.ஐ., மத்திய பா.ஜ., அரசு வசம் இருப்பதால், யாரும் தப்ப முடியாது'ன்னு சொல்லாம சொல்றாரோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap