Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ இனி எப்பவும் ஏகாதசி தான்!

 இனி எப்பவும் ஏகாதசி தான்!

 இனி எப்பவும் ஏகாதசி தான்!

1


PUBLISHED ON : மே 22, 2026 12:20 AM

Follow on Google

PUBLISHED ON : மே 22, 2026 12:20 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியல்வாதிகளில் இவர் ரொம்பவே வித்தியாசமானவராகத் தான் இருக்கிறார்...' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா பற்றி புலம்புகின்றனர், அம்மாநில அதிகாரிகள்.

ராஜஸ்தானில், கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும், அந்த கட்சியின் மூத்த தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா தான் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மா முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால், அவரால் திறம்பட ஆட்சி செய்ய முடியுமா என, பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுவரை பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறார், பஜன்லால் சர்மா.

சமீபகாலமாக, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலகத்தில், இரவு நேரங்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார், சர்மா. சில நேரங்களில் அதிகாலை வரை கூட, ஆலோசனை கூட்டங்கள் நீடிக்கின்றன. இந்த அனுபவம், அதிகாரிகளுக்கு அவதியை தருகிறது.

அத்துடன், கடந்த சில நாட்களாக, மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்துக்கு செல்லும் முதல்வர் சர்மா, இரவில் அங்கு தங்குகிறார். அந்த நேரத்தில், கிராமத்தில் உள்ள மக்களை அழைத்து அவர்களிடம் குறைகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.

'இப்படியே போனால், தலைமைச் செயலகமே இரவில் தான் செயல்படும் போலிருக்கிறது. இனி, ஒவ்வொரு இரவும் நமக்கு ஏகாதசி தான்...' என அதிகாரிகள் புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap