/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
புற்றுநோயை உருவாக்கும் காற்று மாசு
காற்றுமாசு நுரையீரலை பாதிப்பது தெரிந்த விஷயம். இதுபோல நீண்டகால காற்று மாசுபாடு பாதிப்பும் புற்றுநோய்க்கு காரணமாகிறது என அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண இடத்தில் வசிப்பவர்களை விட, நீண்டகாலம் காற்று மாசு பகுதியில் இருப்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 44 சதவீதம், புரஸ்டோஸ் புற்றுநோய் ஏற்பட 22 சதவீதம் கூடுதல் வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசால் ஏற்படும் பாதிப்பு என்பது புகைத்தல், உடல் பருமன், மது பயன்பாட்டை விட கொடியதாக மாறியுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக கடற்புற்கள் தினம்
கடற்புற்கள் என்பது கடலுக்கு அடியில் வாழும் ஒரு தாவரம். இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. சில கடல்வாழ் உயிரினங்களுக்கு கடற்புற்கள் முக்கிய உணவாக உள்ளது. 1930களில் இருந்து கடல்புற்களின் பரப்பு குறைந்து வருகிறது. இவை குறைந்தால் கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடல் தண்ணீரை சுத்தப்படுத்துதல், மாசுக்களை கவர்தல் போன்றவை கடல்புற்களின் பணி. கடலில் ஏற்படும் கார்பனில் 18 சதவீதத்தை இவை உறிஞ்சி விடுகின்றன.

